"மரத்துடன் திருமணம்.. - இயக்குனருடன் நெருக்கம்... " - ஐஸ்வர்யா ராய் குறித்து பலரும் அறிந்திடாத ரகசியங்கள்..!


1994 ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் அழகி போட்டியில், ​​தனது 21 வயதில் பட்டத்தை கை பற்றியபோது, ஐஸ்வர்யா ராய்க்கு மிக அழகான பெண் என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா கல்லூரியின் மிக அழகான பெண் என்று அழைக்கப்பட்டார். 
 
பின்னர் 1994 ஆம் ஆண்டில் உலக அழகி மகுடத்தை வென்றதன் மூலம் உலக அழகி என்பதை நிரூபித்தார்.மாடலிங் துறையில் ஈடுபடும் போது ஐஸ்வர்யா ராய் தன்னை மாறுபடுத்தி காட்டினார்.
 
கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு தற்போது ஆராத்யா, என்கிற பெண் குழந்தை உள்ளது.ஐஸ்வர்யா ராய் எங்கு சென்றாலும் தன் மகளை உடன் அழைத்துச் செல்வார். 
 
 
மேலும் வீட்டை விட்டு வெளியே வந்தால் எப்பொழுதும் மகளின் கையை பிடித்துக் கொள்வார். அவர் மகளை பாதுகாக்க அப்படி செய்கிறார். அதற்காகவே அவரை சமூக வலைதளவாசிகள் அவ்வப்போது விளாசுவார்கள். நேற்று பிறந்த குழந்தை எல்லாம் தனியாக நடக்கிறது. 
 
ஆனால் ஆராத்யாவின் கையைவிட மாட்டேன் என்கிறார் ஐஸ்வர்யா ராய் என விமர்சிக்கிறார்கள்.மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வனில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய் பச்சன். 
 
இப்படி இந்தியா முழுதும் பிரபலாமான, பலருக்கும் தெரிந்த முகமாக வளம் வரும் ஐஸ்வர்யாராய் பற்றிய சில சுவாரஸ்யமான, பலரும் அறிந்திடாத இருண்ட ரகசியங்களை பற்றி இங்கே பார்ப்போம். 


 
1. இவர் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ராஜீவ் முல்சந்தி, சல்மான் கான், விவேக் ஓபராய் ஆகியோருடன் காதலில் இருந்ததாக தகவல்களும், ஒருவரை ஒருவர் காதலித்தார்கள் என்பதற்க்கான பல ஆதாரங்களும் உண்டு. (இங்க எப்படி.. நம்ம லேடி சூப்பர் ஸ்டாரோ.. அந்த மாதிரி, அங்க ஐஸ்வர்யா ராய்) 
 
2. பட வாய்ப்புக்காக பிரபல இயக்குனர் சுபாஷ் கய் (Subash Ghai) உடன் மிக நெருக்கமாக இருந்தார் என்ற வதந்தியும் உண்டு. 
 
3. நடிகர் சல்மான் கான் நடித்த சல்தே சல்தே (Chalte Chalte) படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தொல்லை தரும் படி நடந்து கொண்டதால், அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய். 
 
4. ஒரு கட்டத்தில் தன்னை சல்மான் கானுக்கு எதிராக நடிக்க சொன்னதாக பிரஸ் மீட் ஒன்றில் விவேக் ஒபராய் தெரிவித்திருந்தார். 
 
5. அமிதாப் பச்சன் குடும்பத்தால் மட்டுமே சல்மான் கானின் கோபத்திலிருந்து தன்னை காப்பற்ற முடியும் என பச்சன் குடும்பத்தில் தன்னை இணைத்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். 
 
6. ஜாதக விஷயங்களில் அதீத நம்பிக்கை கொண்டவர். இவரது ஜாதகத்தின் மூலம் இவரது கணவரின் உயிருக்கு பங்கம் ஏற்படும் என்பதால், முதலில் ஒரு மரத்துடன் திருமணம் செய்து கொண்டு, அந்த மரத்தை வெட்டி விதவையானார். 
 
அதன் பிறகு, அபிஷேக் பச்சனை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா ராய்க்கும் மரத்திற்கும் உண்டான திருமணம் நிஜ திருமணம் போலவே அவரது நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது என்ற தகவலும் உண்டு. 
 
7. தனது மாமியார் ஜெயா பச்சன், மற்றும் அபிஷேக்கின் சகோதரி ஸ்வேதா ஆகியோரை சுத்தமாக பிடிக்காதாம். இதனால், தனி குடித்தனம் புகுந்து விட்டாராம் அம்மணி.
Blogger இயக்குவது.