அளவுக்கு மீறினால் அமிர்தமும் "Cringe" குழந்தாய்.. - கைதின் போது கதறிய சூப்பர் மாடல்..!
நடிகை மீரா மிதுன் தமிழ் இயக்குநர்கள் சிலரை சாதிய ரீதியாக தாக்கி பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது ஆண் நம்பருடன் மீரா தோன்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவதுடன் அந்த சமூகத்தை சார்ந்த இயக்குநர்களை திரை துறையை விட்டு நீக்கவேண்டும் என்று அறுவருக்கத்தக்க வகையில் சாடியிருந்தார்.
மீரா மிதுனின் இந்த அடாவடி பேச்சு பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார்.
அப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகை மீரா மிதுனை கேரளா போலீசார் உதவியுடன் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.கேரளா ஓட்டலில் கைது செய்யப்பட்ட மீரா மிதுனை சென்னை அழைத்துவர போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனிடையே, மீரா மிதுனை கைது செய்ய போலீசார் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்ற போது, அங்கு போலீசாரை கைது செய்ய விடாமல் மீரா மிதுன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், அங்கு நடந்த சம்பவத்தை மீரா மிதுன் தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்கள் எல்லோரும் என்னை துன்புறுத்துகின்றனர். முதலமைச்சர் அவர்களே ஒரு பொண்ணுக்கு இப்படி தான் நடக்கனுமா? ஒரு பொண்ணுக்கு நிஜமாகவே இப்படி தான் நடக்கனுமா? எல்லோரையும் வெளியே போக சொல்லுங்க.. போலீஸ்னா அராஜகம் பன்னுவீங்களா..என் போன தர முடியாது.
கத்திய எடுங்க.. என்ன குத்திட்டு இங்க இருந்து என்ன வெளியே எடுத்துட்டு போங்க.. நான் இங்கேயே குத்திட்டு செத்துருவேன்.. முதலமைச்சர் அவர்களே, பிரதமர் மோடி அவர்களே, இந்த தமிழ்நாடு போலீஸ் என்ன ரொம்ப டார்ச்சர் பன்றாங்க என்று அதில் கூறுகிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அளவுக்கு மீறினால் அமிர்தமும் Cringe குழந்தாய் என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.