ரொமான்ஸ்-ல் இறங்கி கலக்கும் சாய் பல்லவி - வைரலாகும் லவ் ஸ்டோரி ட்ரெய்லர்..!
நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் சேகர் கம்முல்லா இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்குப் படம் - லவ் ஸ்டோரி.
சாய் பல்லவியின் முதல் தெலுங்குப் படமான ஃபிடாவை சேகர் கம்முல்லா இயக்கியிருந்தார். லவ் ஸ்டோரி படம் செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இதுவரை மூன்று தெலுங்குப் படங்களில் சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் சாய் பல்லவி நடிப்பில் தமிழில் வெளியான தியா படம் தெலுங்கிலும் வெளியானது.
தற்போது மூன்று தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்நிலையில் லவ் ஸ்டோரி படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.