"எந்த பையனும்.. என் மேல.. இதை யூஸ் பண்றது இல்ல..." - புலம்பும் ப்ரியா பவானி ஷங்கர்..!
'மேயாத மான்' படத்தின் மூலம் தன்னுடைய வெள்ளித்திரை பயணத்தை துவங்கினார் பிரியா பவானி ஷங்கர். எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார். இந்தியன்2, பத்து தல, ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஓ மணப்பெண்ணே, குருதி ஆட்டம், பொம்மை ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
அம்மணி அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகியுள்ளதால், முன்னணி நடிகைகள் பட்டியலுக்கு நுழைந்துள்ளார். பல வெற்றி படங்களை தந்த முன்னணி நாயகி. தொடர்ந்து வெற்றி படங்களை தந்த வரும் முன்னணி நாயகியாக வலம் வரும் ஜாக்பாட் நாயகி.
இவரின் வளர்ச்சி பல இளம் நாயகிகளை பிரமிக்க வைத்துள்ளது. இளம் நாயகிகளில் அதிக படங்களை கையில் வைத்திருப்பவதும் இவரே. வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நாயகி.
ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி பதிவேற்றியும் வருகிறார்.
அந்த வகையில், தற்போது மேக்கப் இல்லாமல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பிக்பாஸ் ரைசா, "எந்த முயற்சியும் இல்லாம.. அழகா தெரியுரத முதல்ல நிறுத்துங்க.." என்று அவரது மேக்கப் இல்லாத இயற்கையான அழகை வர்ணித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ப்ரியா பவானி ஷங்கர்..எந்த பையனும் என் மேல இப்படியான வரிகளை யூஸ் பண்றது இல்லையே.. அது தான் எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது.." என்று ரிப்ளை கொடுத்துள்ளார்.