ஆக்டிவ் ஆசாமியாக VJ பாவனா..! - சினிமா வாய்ப்பு தேடுகிறாரா..?

 
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 
 
பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். 
 
இவர் ஏதாவது கவர்ச்சி வீடியோவை இறக்குவார் என்ற ஆர்வத்திலேயே ரசிகர்கள் உள்ளனர். சமீப காலமாக எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பாவனா சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். 
 
அதன் பிறகு அம்மணிக்கு தொகுப்பாளினி வாய்ப்பு படு ஜோராக சூடுபிடிக்க துவங்கியது. நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் கூட தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார். 
 
பாவனா தனது உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள உடற் பயிற்சிகளை செய்வது வழக்கம். அவ்வப்போது, கவர்ச்சி உடையில் தரிசனம் காட்டுவது, ட்ரெடிஷனல் உடையில் நாட்டியம் ஆடுவது என தன்னை ஒரு ஆக்டிவ் ஆசாமியாக வைத்துக்கொள்கிறார் அம்மணி.
Blogger இயக்குவது.