அண்ணன் தங்கச்சி.. எப்படி புருஷன் பொண்டாட்டி ஆனாங்க..! - ரம்யா கிருஷ்ணன் குறித்து வெளியான் சுவாரஸ்ய தகவல்..!


தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் தற்போது BB ஜோடிகள் எனும் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் பிக் பாஸ் 5யிலும் போட்டியாளராக பங்கேற்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது பிறந்தநாளை நேற்று தோழிகளுடன் கொண்டாடியுள்ளார். அப்போது அவர் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
இதற்கிடையில் நடிகை ரம்யாகிருஷ்ணன் குறித்த செய்தி ஒன்று தற்போது சமூகவலைத்தள பக்கத்தில் பரவி வருகிறது.வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். 
 
அதன்பிறகு இவர் தமிழ்சினிமாவை ஏகப்பட்ட படங்கள் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். 80 களில் உச்ச நடிகையாக இருந்த இவர் தற்போதும் நடிப்பில் மிரட்டி வருகிறார். அதிலும் குறிப்பாக பாகுபலி படத்திற்குப் பின் இவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. 
 
 
காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது. இவருக்கு கவர்ச்சி வேடமோ, கடவுள் வேடமோ கண கச்சிதமாக பொருந்தும். பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது கவர்ச்சியில் காட்டு காட்டு என காட்டுவார்கள்.ஆனால் ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கில்லாடி.
 

அதன்படி தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான நாசருடன் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தில் மனைவியாகவும், வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் மகளாகவும், படையப்பா திரைப்படத்தில் தங்கையாகவும் நடித்து அசத்தியுள்ளார் என்று கூறி ரசிகர்கள் அப்பட புகைப்படங்களை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
Blogger இயக்குவது.