"இது என்ன உடம்பா... வெடக்கோழி குழம்பா..." - கவர்ச்சி உடையில் கொழுகொழுன்னு இருக்கும் மதுமிதாவை வர்ணிக்கும் இளசுகள் !
உதயநிதி ஸ்டாலின் நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம், காமெடி நடிகையாக அறிமுகமானவர் ஜாங்கிரி மதுமிதா. இந்த படத்தில் இவர் சந்தானத்துடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
அந்தப் படத்தை அடுத்து மிரட்டல், அட்டக்கத்தி, கண்பேசும் வார்த்தைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார்.
சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்துவரும் மதுமிதாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அதிலும் OKOK படத்தில் குறிப்பாக காதலியாக நடித்த மதுமிதாவை, 'அட அட தேன் அட' என கொஞ்சும் காட்சிகள், லட்டு ஜாங்கிரி பூந்தி என கொஞ்சும் காட்சிகளுக்கு வயிறு வலிக்க சிரித்தனர் ரசிகர்.
இந்த படத்திற்கு பின் மதுமிதா ஜாங்கிரி மதுமிதாவாகவே மாறிவிட்டார்.இந்த படத்தை தொடர்ந்து காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் அஜித் நடித்து வெளியான 'விஸ்வாசம்' படத்தில் கூட நடித்திருந்தார்.
இது மட்டுமல்லாமல், ராஜ் டி.வியில் 'ஊர் வம்பு' என்கிற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருவதோடு, 'சின்னப் பாப்பா பெரிய பாப்பா' போன்ற சீரியல்களிலும் நடித்தவர்.
இப்படி விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் காமெடி நடிகைகளின் வரிசையில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் மதுமிதா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி மீடியா வெளிச்சம் படாமல் இருந்தார்.
இந்நிலையில், மீண்டும் சினிமாவுக்குள் என்ட்ரிகொடுக்கவுள்ளார் அம்மணி என்பது தெரிகின்றது. அதனை தொடர்ந்து, கவர்ச்சி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், "இது என்ன உடம்பா... வெடக்கோழி குழம்பா..." என்று வர்ணித்து வருகிறார்கள்.