தல அஜித்துடன் இருக்கும் இந்த பெண் யார் தெரியுமா..? - அஜித்தின் பிரமாண்ட திட்டம்..!


தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களின் பைக்கில் அதிகம் பிரியம் கொண்டவர் அஜித். திரைத்துறையில் நடிக்க வருவதற்கு முன்பும், நடிக்க வந்த பின்பும் கார் ரேஸில் கலந்துகொள்வதை ஆர்வமாக செய்து வந்தார் அஜித். இதனால் இவருக்கு உடல் ரீதியாக நிறைய காயங்களும் ஏற்பட்டுள்ளது. 
 
அடிக்கடி நெடுந்தூரம் பைக்கில் தனியாக பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் அஜீத். அஜித்தின் எந்த ஒரு புகைப்படமும் பொது வெளியில் வெளியானால் அது இணையத்தில் சில மணி நேரங்கள் வைரல் ஆகி விடும். அந்த வகையில் அஜீத் சமீபத்தில் ஒரு பைக் ரேசருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 
 
மாரல் ஆத்தர்லு என்ற பெண் பைக் ரேஸர் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றி வலம் வந்துள்ளார். இவர் ஏழு கண்டங்களில் 64 நாடுகளில் பைக்கில் சென்று வந்துள்ளார். இவரை டெல்லியில் சந்தித்துப் பேசி அஜித்குமார் அவரிடமிருந்து பல நாடுகளில் பைக்கிள் சென்ற அனுபவத்தை கேட்டறிந்தார். 
 
மேலும் பைக்கில் உலகை சுற்றும் ஒரு திட்டத்தையும் போட்டுள்ளார் அஜித். இந்தப் புகைப்படத்தை அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஸ்யாவில் நடைபெற்றது. 
 
அங்கு வில்லன்களுடன் அஜித் மோதும் சேசிங் சண்டை காட்சியை படமாக்கினர். படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர். ஆனால் அஜித் ரஷியாவிலேயே தங்கி பைக்கில் சுற்றி பார்க்க திட்டமிட்டதாக தகவல் வெளியானது. 
 
தற்போது மாரல்வுடன் அஜித்தின் சந்திப்பு, அவர் ஒரு பிரமாண்ட பைக் ட்ரிப்பிற்கு ரெடியாக உள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது.
Blogger இயக்குவது.