"நீச்சல் உடையில் ஈரம் சொட்ட.." - பதின்ம வயதில் பருவமொட்டாக ரம்யா கிருஷ்ணன்..! - வைரல் கிளிக்ஸ்..!

 
1984-ல் ஒய்.ஜி. மகேந்திராவுக்கு ஜோடியாக வெள்ளை மனசு என்கிற படத்தில் நடிக்கும்போது அவருடைய வயது 14. பரதநாட்டிய அரங்கேற்றம் செய்த நிகழ்வின் புகைப்படங்கள் மூலம் ரம்யா கிருஷ்ணனுக்கு சினிமா வாய்ப்புகள் வந்துள்ளன. பாரதிராஜா, டி.ஆர். படங்களின் கதாநாயகித் தேர்வுகளில் கலந்துகொண்ட ரம்யா கிருஷ்ணன், கடைசியில் வெள்ளை மனசு படம் மூலமாக அறிமுகமானார். 
 
மறைந்த அரசியல் விமர்சகர் சோ, ரம்யாவின் உறவினர். இவர் சினிமாவுக்குள் நுழைந்தது சோவுக்குப் பிடிக்கவில்லை. படையப்பா படம் பார்த்த பிறகுதான் என் நடிப்பைப் பாராட்டினார் என்கிறார் ரம்யா கிருஷ்ணன். வெள்ளை மனசுக்கு முன்பு நேரம் புலரும்போல் என்கிற மலையாளப் படத்தில் மம்மூட்டி, மோகன் லாலுடன் இணைந்து நடித்தார். 
 
அந்தப் படம் 1986-ல் தான் வெளிவந்தது. தமிழில் பல படங்களில் நடித்து வந்தவருக்கு 1989-ல் சுட்ரதருலு என்கிற தெலுங்குப் படத்தின் மூலம் திருப்புமுனை ஏற்பட்டது. அந்தப் படம் சிறந்த தெலுங்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. இதனால் 90களில் தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வந்தார்.
 
தமிழ்சினிமாவை ஏகப்பட்ட படங்கள் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். 80 களில் உச்ச நடிகையாக இருந்த இவர் தற்போதும் நடிப்பில் மிரட்டி வருகிறார். அதிலும் குறிப்பாக பாகுபலி படத்திற்குப் பின் இவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது. இவருக்கு கவர்ச்சி வேடமோ, கடவுள் வேடமோ கண கச்சிதமாக பொருந்தும். 
 
 
பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது கவர்ச்சியில் காட்டு காட்டு என காட்டுவார்கள். ஆனால் ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கில்லாடி. படையப்பா படத்தில் இவர் ரஜினியைப் பார்த்து சொன்ன டயலாக் இன்று இவருக்கே பொருந்துகிறது. 50 வயதிலும் கவர்ச்சியில் கலக்கி வருகிறார் ராஜமாதா.
 
 
இவர், கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரம்யா. திருமணத்திற்குப் பின் செலக்டிவாக திரைப்படங்களில் நடித்துவந்த இவர் தொலைகாட்சி தொடர்களிலும் ஆதிக்கம் செலுத்தினார். 
 
 
தொலைக்காட்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினார். நடிப்பது மட்டுமின்றி தற்போது ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 


இந்நிலையில், ரம்யா கிருஷ்ணனின் இளைமைப்பருவ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவன்த்தை சுண்டி இழுத்து வருகின்றன.
Blogger இயக்குவது.