"வெறும் ப்ரா.." - சிக்ஸ் பேக்கை காட்டி கிக் ஏற்றும் சமந்தா.! - கணவர் வீட்டாரை கடுப்பேற்றவா..????
சிக்ஸ்பேக்குடன் நடிகை சமந்தா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. நடிகை சமந்தா நடித்து வெளியான 'ஃபேமிலி மேன்' இணையத் தொடர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தத் தொடரில் சமந்தா விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவராக நடித்திருந்தார். சமீப காலமாக நடிகை சமந்தா உடற்பயிற்சியில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
சீமராஜா படத்துக்காக சிலம்பம் கற்ற அவர், ஃபேமிலி மேன் தொடருக்காக கயிறு ஏறுதல் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டார். மேலும் இந்தத் தொடருக்காக சண்டைக் காட்சிகளில் பங்கேற்ற விடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் கருப்பு உடையில் சிக்ஸ்பேக்குடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நடிகை சமந்தா தற்போது விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் எழுதி இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மறுப்பக்கம், சமந்தா மற்றும் அவரது கணவர் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வைரலாகி வரும் நிலையில் கணவர் வீட்டாரை கடுப்பேற்றத்தான் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாரோ..? என்றும் ரசிகர்கள் இணையத்தில் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.