"குத்துனா இப்படித்தான் குத்தனும்.." - ரம்யா பாண்டியன் வெளியிட்ட வீடியோ..! - குலுங்கும் இன்ஸ்டா..!


விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும், ரம்யா பாண்டியன் தற்போது செம்ம ஸ்டைலிஷ் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேற லெவலில் ரசிகர்களிடம் ரீச் ஆகி லைக்குகளை குவித்து வருகிறது.
 
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வேகத்தில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரம்யா பாண்டியன் கனவை கலைப்பது போல், கொரோனாவின் இரண்டாவது அலை உருவெடுத்தது.
 
முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிக்க கமிட் ஆன படம், படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.
 
கிராமத்து கதை அம்சத்துடன் கூடிய படமாக உருவாகியுள்ள 'ராம ஆண்டாலும் ராவண ஆண்டாலும்' படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டது.
 
இந்த படத்தை தவிர வேறு படங்கள் இவரது கை வசம் இல்லாததால், வழக்கம் போல் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். 
 

அந்த வகையில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்டு ரிகர்சல் பார்த்த ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், குத்துனா இப்படித்தான் குத்தனும்.. என வர்ணித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.