"என்ன சார்...டோனே மாறிடுச்சு.." - போலி போராளி சூர்யா.. - கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!


2017-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அரியலூர் அனிதா. நீட் தேர்வுக்கு நடிகர்கள் எதிர்ப்பு குரல் அப்போது அவரை சில அரசியல் கட்சிகள் தூண்டிவிட்டு வழக்கு தொடர வைத்ததாகவும் கூறப்படுவதுண்டு. 
 
ஆனாலும் சுப்ரீம் கோர்ட், நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்து இறுதி தீர்ப்பு அளித்ததால் மனமுடைந்த மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயர நிகழ்வு நடந்தது. அப்போது தமிழகமே கொந்தளித்தது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் அனிதாவுக்காக கண்ணீர் வடித்தனர். 
 
நடிகர்கள் ரஜினி, கமல்,விஜய் சூர்யா, விஷால், விஜய்சேதுபதி, சித்தார்த் இயக்குனர் ப.ரஞ்சித் என்று 50க்கும் மேற்பட்டோர் அறிக்கை வெளியிட்டு வேதனையும் தெரிவித்தனர். சூர்யாவைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு நீட் தேர்வு கூடாது என்பதில் எப்போதுமே உறுதியாக இருப்பவர். 
 
கடந்த ஆண்டு நீட் தேர்வு பயத்தால் தேர்வு எழுதுவதற்கு முதல் நாள் தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது அவர் வெளியிட்ட அனல் பறந்த அறிக்கையில், “கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. 


 
கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுதவேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார். 

நம்பிக்கையில் இருந்த மாணவர்கள்

இது சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்ய சட்டம் இயற்றப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி, மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆகியோர் தேர்தலின்போது தீவிர பிரச்சாரமும் செய்தனர். 
 
 
இதனால் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு நடக்காது என்று மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டனர். 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்தது. ஆனால் திமுக அரசு சட்டம் இயற்றுவதற்கு முன்பாகவே கடந்த 12-ம் தேதி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. 
 

நம்பிக்கை இழந்த மாணவர்கள்

 
தேர்வு நடப்பதற்கு முதல் நாள் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவனும், தேர்வு எழுதிய பிறகு அரியலூரைச் சேர்ந்த கனிமொழி, வேலூர் காட்பாடி மாணவி சௌந்தர்யா ஆகியோரும் தோல்வி அடைந்து விடுவோமோ என்று பயந்து தற்கொலை செய்து கொண்டனர்.
 
இந்த நிலையில்தான் மாணவ-மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக “ஒரு பரீட்சை உயிரை விட பெரிது அல்ல” என்ற தலைப்பில் இரண்டு நிமிடம் ஓடக்கூடிய உருக்கமான ஒரு வீடியோ ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டார். அவருடைய இந்த வீடியோ பேச்சு நெட்டிசன்களால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
 

அது வேற வாய்.. இது நாற வாய்

 
 
மிக முக்கியமாக சூர்யா வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள், எவ்வளவு தத்ரூபமாக நிஜ வாழ்க்கையில் நடிக்கிறீர்கள். உங்கள் டோனே மாறிப்போச்சே.. சென்ற ஆட்சியில் ஆட்சியாளர்களையும், ஆட்சியையும் எதிர்த்த நீங்கள், இப்போது மாணவர்களுக்கு அறிவுரை சொல்லுறீங்களே.. அது வேற வாய்.. இது நாற வாயா.. சினிமாவில் பல வேடங்களை போடுங்கள், நிஜ வாழ்கையில் எதற்கு இந்த இரட்டை வேடம் என்று பல கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு வருகின்றனர்.
 

சில்வண்டு சித்தார்த்


 
இப்படித்தான் நடிகர் சித்தார்த்தும், கடந்த ஆட்சியில் ஆட்சியாளர்கள் பொய் சொன்னால் கன்னத்தில் அறைவேன் என்று கர்ஜித்தார். இந்த விவகாரத்தில் தற்போதைய தமிழக அரசு பொய் போசியுள்ளதே.. முதல் சட்டமன்ற கூடத்திலேயே சட்டம் இயற்றுவோம் என்று கூறிவிட்டு இயற்றாமல் விட்டதால் மாணவர்கள் ஏமாந்து தவறான முடிவை எடுத்து விட்டார்களே.. 
 
இப்போது நீங்கள் சென்ற ஆட்சியில் சொன்னது போல செய்வீர்களா..? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப, நான் என் வேலையை தான் செய்தேன்.. என்று சூசகமாக எதையோ சொல்லிவிட்டு ட்விட்டரை விட்டே நடையை கட்டி விட்டார் சித்தார்த் என்பது குறிப்பிடத்தக்கது.
 

குமட்டில் குத்து


நடிகர்கள் ஒரு குறிபிட்ட கட்சி சார்பாக பேசுவது ஒன்றும் தவறு அல்ல. ஆனால், அந்த கட்சிக்காரன் என்று அடையாளபடுத்திக்கொண்டு செய்தால் நலம். அதற்கு நேர்மாறாக மக்களோடு மக்களாக இருந்து கொண்டு அவர்களை வழி நடத்துவது போன்ற கருத்துகளை உதிர்த்து விட்டு சந்தில் சிந்து பாடினால் இப்படித்தான் குமட்டில் குத்து வாங்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் பொதுவான நெட்டிசன்கள்.
Powered by Blogger.