"எங்ககிட்டயும் Six Pack இருக்கு.." - OTT நாயகியாகும் ரம்யா பாண்டியன்..!
ஒரேயொரு போட்டோஷூட், டோட்டல் தமிழ்நாடு க்ளோஸ் என்றதுமே எல்லோருடைய நினைவுக்கு வருபவர் ரம்யா பாண்டியன்தான். ஏற்கெனவே, ஜோக்கர் திரைப்படத்தில் நடித்திருந்தாலும், அவருடைய புடவை போட்டோஷூட்தான் புகழைத் தேடித்தந்தது.
இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வாய்ப்பு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சில சின்னத்திரை நிகழ்ச்சிகளின் நடுவர் என டிவி பெட்டிக்குள்ளேயே சுற்றித் திரிந்தவர் சமீபத்தில் தான் நடித்த ‘ராமே ஆண்டாளும் ராவணே ஆண்டாளும்’ பட ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாகி உள்ளார்.
என்னுடைய முதன்மை இலக்கு படங்கள்தான். ஆனால், லாக்டவுனில் திரைப்பட ஷூட்டிங் எதுவும் பெரிதாக இல்லை என்பதால் பிக் பாஸ் உள்ளிட்ட சின்னதிரை வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். இப்போது மீண்டும் வெள்ளித்திரைக்குச் சென்றிருக்கிறேன்.
என்னை எப்போதுமே நடிகையாகத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள்.முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிக்க கமிட் ஆன படம், படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ஓடிடி தளத்தில் நேற்று (செப்டம்பர் 24)-ம் தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.
இந்த படத்தை தவிர வேறு படங்கள் இவரது கை வசம் இல்லாததால், வழக்கம் போல் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
மேலும் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், தன்னுடைய தங்கை கீர்த்தி பாண்டியனுக்கு சவால் விடும் விதமாக, கவர்ச்சியில் புகுந்து விளையாட துவங்கியுள்ளார்.
அந்த வகையில் தற்போது கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் உடையில்... பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.