என்னமா இவ்ளோ ஒப்பனா பேசுறீங்க..? - ரேஷ்மா Thug Life..
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி முருங்கைக்காய் சிப்ஸ், சத்திய சோதனை, முணு முப்பத்தி மூணு ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.சீரியல், படங்களில் நடித்து வந்த இவர், தனது ரசிகர்கள் வட்டத்தை பெருக்கவும், பட வாய்ப்புக்காகவும் கவர்ச்சி குயினாக மாறி வருகிறார்.
இணையத்தில் இவர் பதிவிடும் போட்டோவில் சமீபகாலமாக கவர்ச்சி எல்லை மீறி உள்ளது.விமான பணிப்பெண்ணான ரேஷ்மா, சினிமா மீது இருந்த ஆர்வத்தால் அதை விட்டு விட்டு சின்னத்திரையில் நுழைந்தார். நடிகை, தொகுப்பாளினி, செய்திவாசிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக விளங்கி வருகிறார்.
இவர் முதன் முதலில் சன்தொலைக்காட்சியில் வம்சம் என்ற சீரியலில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரியின் மனைவியாக நடித்து இருப்பார்.
இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் இது என்றாலும் இதில் புஷ்பா கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. பட்டி தொட்டி எங்கும் புஷ்பா புருஷன் நீங்க தானே என்ற டைலாக் செம வைரலானது.
இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மேலும் பிரபலமானார்.இவர் முதல் முதலில் ஐந்து டிவி என்னும் ஒரு சேனலில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றினார் .
அதுவும் ஆங்கில நியூஸ் ரீடர் வேலை செய்து கொண்டிருந்தார் .ஒரு நியூஸ் ரைடர் ஆக இருக்கும் போதுதான் அவருக்கு நடிப்பதற்கு ஆசை வந்திருக்கிறது .அந்த நேரத்தில் வம்சம் என்னும் சீரியலில் ரம்யா கிருஷ்ணனுடன் இவர் இணைந்து நடித்திருக்கிறார்.
தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் இவர், சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில், நடிகர் யாராவது உங்களுடன் ஃப்ளிர்ட் பண்ணி இருக்காங்களா..? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நிறைய பேர் பண்ணியிருக்காங்க... பொதுவா அவங்க பண்றதுக்கு முன்னாடியே நான் பண்ணிடுவேன்.. அது, அவர்களுடன் ஆரோக்கியமான உறவு இருக்க வழி வகுக்கும் என கூறியுள்ளார்.