என்னங்க இது..? அப்டியேவா...? - முதன் முறையாக நீச்சல் உடையில்... திணறடிக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

 
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் இல்லத்தரசிகளின் உள்ளம் கவர்ந்த சீரியலான பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்தில் நடிப்பவர் நடிகை ரேஷ்மா. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இந்த ரோலில் இதற்கு முன்பு ஜெனிஃபர் நடித்திருந்தார். 
 
இந்த சீரியல் மூலம் அவருக்கு சின்னத்திரையில் மிகப் பெரிய ஃபேன்ஸ் ஃபோலோ உருவானது. ஆனால் அவர் கர்ப்பமாக இருந்தால் அந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகினார். அடுத்து இந்த ரோலில் யார் நடிப்பார்? என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக் பாஸ் ரேஷ்மா ராதிகாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். 
 
கரண்டாக அவர் தான் சீரியலில் ராதிகாவாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். புஷ்பா புருஷன் காமெடி நடிகை ரேஷ்மா என்றால் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ். நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினரான இவர் முதன் முதலில் சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியல் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார்.
 
ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்த அந்த சீரியலுக்குப் பிறகு, ‘மசாலா படம்’ படத்தில் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். வெள்ளித்திரையில் 7 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 
 
மரகதவீணை, 10 மணி கதைகள், வாணி ராணி, பகல் கனவு என பல சீரியலில் நடித்தார். நடிப்பு மட்டுமில்லை சன் சிங்கர் ஷோவை தொகுத்தும் வழங்கி இருக்கிறார். இதற்கு இடையில் நடிப்பை விட்டு விலகி பிரபல செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராகவும் ரேஷ்மா பணிப்புரிந்துள்ளார். 
 
 
ரேஷ்மா என்றாலே கிளாமர் பொம்மை என்ற பிம்பத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார் அம்மணி. அதனை ரசிகர்கள் மறந்து விடாமல் இருக்க அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள அவர் தற்போது முதன் முறையாக நீச்சல் உடையில் நீச்சல் குளத்திலேயே இருந்த படி போஸ் கொடுத்து ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டியுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.