"உங்க சூட்டுல காஃபி கப்பே உருகிடுச்சு..." - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட புகைப்படம்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். 
 
அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.
 
ஹீரோயினாக மட்டுமல்லாமல் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ் முன்னணி நடிகர்கள் இளம் நடிகர்கள் என எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் கதையை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.
 
 
தமிழில் ஜகஜால கில்லாடி, பொன்மாணிக்கவேல் மற்றும் பார்ட்டி ஆகிய படங்கள் நிவேதாவுக்கு வெளியாக உள்ளன. இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நிவேதா பார்ட்டி படத்தில் பிகினியில் வந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். 



 
இந்த படத்திலிருந்து ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகி உள்ளது. அதில் நிவேதா அரைகுறை ஆடையில் அட்டகாசமாக நடனம் ஆடி இருப்பார்.படங்களில படு பிஸியாக நடித்து வந்த நிவேதா, கொரோனா ஊரடங்கால் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். 
 
சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், காஃபி குடிக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் குடித்த காஃபி கப் உருகி வழிவது போன்ற ஒரு டிசைனில் இருப்பதை பார்த்த ரசிகர்கள், உங்களோட சூட்டுல காஃபி கப்பே உருகிடுச்சு என்று கமெண்டடித்து வருகிறார்கள்.
Powered by Blogger.