"ஒரு ஆம்பளைக்காகலாம் இதை பண்ண முடியாது.." - கூச்சமே இல்லாமல் கூறிய கரீனா கபூர்..!
இந்தி நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்ட நடிகை கரீனா கபூர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஏற்கனவே தனது மகனுக்கு தைமூர் என்ற பெயர் வைத்து எதிர்ப்புக்கு உள்ளானார்.
இந்தியா மீது 14-ம் நூற்றாண்டில் படையெடுத்து ஏராளமானோரை கொன்று குவித்த மங்கோலிய மன்னனான தைமூர் பெயரை எப்படி சூட்டலாம் என்று பலரும் கண்டித்தனர். பின்னர் தனது பிரசவ கால அனுபவங்களை புத்தகமாக எழுதி அதற்கு பிரெக்னன்ஸி பைபிள் என்று பெயரிட்டு வெளியிட்டார்.
இது கிறிஸ்தவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. புத்தகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தினர்.சமீப காலமாக வரலாற்று சிறப்பு மிக்க கதைகளுக்கும், இதிகாச புராண கதைகள் குறித்து தெரிந்து கொள்வதில் மக்கள் ஆவர்வம் காட்டி வருவதால், இதனை மையமாக வைத்து பலர் படம் எடுக்க துவங்கி விட்டனர்.
அந்த வகையில் ராமாயணத்தில் இடம்பெறும் சீதா தேவியை மையமாக வைத்து படம் எடுக்க பாலிவுட் இயக்குனர் ஒருவர் நடிகையை அணுகிய போது, அவர் 12 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கதையில் சீதாவாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரை படக்குழு அணுகியதாகவும், இந்தப் படத்திற்கு அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, கரீனா செட் ஆக மாட்டார் என யோசித்த படக்குழு அவருக்கு பதில் மற்றொரு நாயகியை தற்போது தீவிரமாக தேடி வருகிறார்கள்.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கரீனா கபூர் கான். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் பிசியான ஹீரோயினாக இருக்கிறார்.அவர் நடிக்க வந்த புதிதில் பல்வேறு நடிகர்களுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டார். அதிலும் குறிப்பாக ரித்திக் ரோஷனுடன் தான் கரீனாவின் பெயர் அடிபட்டது.
இது குறித்து பேட்டி ஒன்றில் கரீனா கபூர் கூறியதாவது, எனக்கும், ரித்திக்கிற்கும் இடையே எதுவும் இல்லை. இந்த பேச்சுகளால் அவரின் திருமண வாழ்க்கை பாதிக்கப்படுமே என்பது தான் என் கவலையே. மேலும் என் கெரியரும் பாதிக்கப்படும்.
முதலில் ரித்திக், நாளை வேறு ஒருவர். எனக்கு உண்மை தெரிந்தால் போதும் என்றார். ரித்திக் ரோஷனுடன் இருக்க தன் கெரியரை கைவிட கரீனா முடிவு செய்துவிட்டதாக அப்பொழுது பேச்சாக இருந்தது. ஆனால் ஒரு ஆம்பளைக்காகலாம் என் கெரியரை விட முடியாது என்று கூச்சமே இல்லாமல் கூறியுள்ளார் கரீனா.