"அரைகுறை ஆடையில் நயன்தாரா.." - செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா , அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களை தன் கை வசம் வைத்திருந்தாலும், அவ்வப்போது இவருடைய திருமணம் குறித்த தகவல்கள் அதிகம் உலா வருகிறது. அந்த வகையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன், திருமண தேதி, முடிவு செய்யப்பட்டதாக புதிய தகவல் கசிந்துள்ளது.
சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, அவ்வப்போது டேட்டிங் செய்வதையும், ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிக்கிள்ஸை வெறுப்பேற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
அதே போல் தங்களது காதல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராகி வரும் இந்த ஜோடி, திருமணத்திற்கும் தயாராகி வருகிறார்கள். பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார் நடிகை நயன்தாரா.
சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 'நெற்றிக்கண்' பட புரொமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
இவர் நிச்சயதார்த்தம் குறித்து பகிர்ந்து கொண்டதை தொடர்ந்து, விரைவில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளதாகவும், திருமணத்திற்கு முன் தன்னுடைய கை வசம் உள்ள படங்களை நடித்து முடித்து விட முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன், நயனுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு "ஆறு வருஷம் ஆகிடுச்சா.. நம்பவே முடியலையே.." என்று கேப்ஷன் வைத்துள்ளார்.