என் மகனை விவாகரத்து செய்துவிட்டு போயிருக்கலாம்.. ஆனால்,... - சமந்தாவிற்கு நாகர்ஜுனா அதிரடி பதிவு..!
சமந்தா- நாக சைதன்யா விவாவகரத்து செய்திகள் வெளிவரத் தொடங்கிய போது, இது குறித்து இருவருமே எதுவும் சொல்லவில்லை. வதந்தி என மட்டுமே இதற்கான பதிலாக சமூக வலைத்தளங்களிலும், சமீபத்திய சில பேட்டிகளிலும் தெரிவித்து இருந்தார்கள்.
இந்த நிலையில், இன்னும் சில நாள்களில் (அக்டோபர் 6) இருவருக்கும் நான்காவது திருமண நாள் வரவிருக்கும் நிலையில், தற்போது இருவருமே தத்தமது சமூக வலைத்தளங்களில் "பல உரையாடல்கள் மற்று யோசனைகளுக்கு பிறகு நானும் சாய்யும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து இருவருடைய தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம்," என்று பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், நாகசைதன்யாவின் தந்தையும், சமந்தாவின் மாமனாரும் பிரபல நடிகருமான நாகர்ஜுனா சற்று முன் வெளியிட்ட பதிவில், சமந்தா, நாகசைதன்யா இருவரும் விவாகரத்து செய்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை அவர்களுக்கு உண்டான தனிப்பட்ட பிரச்சனை.
சமந்தா நாகசைதன்யா-வை விவாகரத்து செய்துவிட்டு போயிருக்கலாம்.. ஆனால், அவர் எங்கள் குடும்பத்துடன் செலவு செய்த நாட்களை என்றும் நினைவில் வைத்திருப்பேன். எப்போதும் சமந்தா எண்களின் அன்புக்குறியவராகவே இருப்பார்.
இருவருக்கும் கடவுள் நல்ல வலிமையை கொடுத்து ஆசிர்வதிப்பார் என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தில் அமைதி காக்காமல் அதிரடியாக தனதுகருத்தை கூறியுள்ள நாகர்ஜுனாவின் இந்த பதிவு வைரல் ஆகி வருகின்றது.