"எல்லாமே பொய்யா கோபால்..." - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படங்கள் - கலாய்க்கும் ரசிகர்கள்..!
செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர் விஜ ய் டிவியின் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடரில் குழந்தைக்கு அம்மாவாக நடித்த மிகவும் பிரபலமானார். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
வைபவ் ஜோடியாக மேயாதமான் படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். அந்தப் படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து கடைக்குட்டி சிங்கத்தில் கார்த்தியின் முறைப் பெண்ணாக நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார். மான்ஸ்டர் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா உடன் நடித்திருப்பார்.
அப்படம் எலியை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். வடிவேலுடன் சோபாவில் அமர்ந்து இருப்பது போல புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியா சங்கர் பதிவிட்டார். அந்த படத்தில் வடிவேலு எலி பட கெட்டப்பில் இருக்கிறார்.
2017 ஆம் ஆண்டு 'மேயாத மான்' படத்தின் மூலம் தன்னுடைய வெள்ளித்திரை பயணத்தை துவங்கிய, பிரியா பவானி ஷங்கர்... ஒரு வருடத்திற்கு ஒரு படம் என சிறப்பான படங்களாகவே தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் இந்த 2021 - ல் மட்டும் இவரது கைவசம் சுமார் 10 படங்கள் உள்ளது.
'கசட தபற', 'குருதியாட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'ஹாஸ்டல்', 'ருத்ரன்', 'இந்தியன் 2 ' , '10 தல' , என புதிய படங்களில் கமிட் ஆகிக்கொண்டே செல்கிறார். இவரது இந்த அசுர வளர்ச்சி பல இளம் நடிகைகளை பிரமிக்க வைத்துள்ளது என்றும் கூறலாம்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், தொடர்ந்து தனது போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். தனது உடலை ஸ்லிம்மாக வைத்து இளைஞர்களை கவர்ந்து வரும் பிரியா பவானி ஷங்கர், தொடர்ந்து உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், காற்றின் ஈரம் அதை யார் தந்ததோ என்ற பாடலில் நீங்காத புன்னகை ஒன்று என்ற வரிகளை உருவி அதை கேப்ஷனாக வைத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், எல்லாமே பொய்யா கோபால்.. கஷ்டப்பட்டு சிரிக்குற மாதிரி.. நிப்பான் பெயின்ட் இந்தியாவின் நம்பர் 1 பெயிண்ட் என்று கலாய் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.