"பச்ச தண்ணி பத்திக்கும் போலயே..." - கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் ப்ரியா பவானி ஷங்கர்..!
செய்தி வாசிப்பாளர், சின்ன திரை நடிகை, துணை நடிகை என்று இருந்த பவானி சங்கர் தற்போது முழு நேர திரைப்பட கதாநாயகியாக மாறியுள்ளார். கிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு வேடங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் இதுவரை நடித்ததில்லை.
எனவே பிரியா பவானி சங்கரைப் பார்க்கும் போது பக்கத்து வீட்டு பெண் போலவே உள்ளது என்று அவரது ரசிகர்களை அவரை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், உடல் எடை இளைத்து மிகவும் ஒல்லியான தோற்றத்திற்கு அவர் மாறியுள்ளார்.
மேயாத மான் மூலம் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் கைவசம் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இதில் குருதியாட்டம், ஓ மணப்பெண்ணே, ஹாஸ்டல், ருத்ரன், இந்தியன் 2 , 10 தல என புதிய படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், தொடர்ந்து தனது போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். தனது உடலை ஸ்லிம்மாக வைத்து இளைஞர்களை கவர்ந்து வரும் பிரியா பவானி ஷங்கர், தொடர்ந்து உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து மீம்களைபறக்க விட்டு வருகின்றனர். இன்னும் சிலர் பச்ச தண்ணி கூட பத்திக்கும் போலயே என்று உருகி வருகின்றனர்.