டான்ஸ் மாஸ்டருடன் நடிகை அசின் அடித்த கூத்து..! - இதுவரை பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

 
மாடலாக இருந்து பின் நடிகையாக மாறியவர் கேரளத்து பைங்கிளி அசின். மலையாளத்தில் கடந்த 2001 ஆண்டு அறிமுகமான இவர், தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரையுலகிற்கு தாவினார். 
 
பின்னர் தமிழில் இவர் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி' திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இவர் நடித்த படங்கள் வெற்றி பெறவே தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் குவிந்தது. 
 
சூர்யாவுக்கு ஜோடியாக கஜினி, விக்ரமுக்கு ஜோடியாக மஜா, விஜய்க்கு ஜோடியாக சிவகாசி, அஜித்துடன் ஆழ்வார், என தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடிபோட்டு நடித்தார். தமிழை தொடர்ந்து பாலிவுட் திரையுலகிலும் கவனம் செலுத்த துவங்கினார் அசின். 
 
 
அப்போது எதேர்ச்சியாக பிரபல நடிகர் சல்மான்கானின் நண்பரும், மைக்கிரோமேக்ஸ் உரிமையாளர்களில் ஒருவராக ராகுல் ஷர்மாவின் நட்பு கிடைத்து அது காதலாகவும் மாறியது. 
 
 
இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டை சேர்ந்தவர்களும் சம்மதம் தெரிவிக்கவே, இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இவர் தமிழில் நடித்த எம்.குமரன் S/O மகாலக்ஷ்மி படத்தில் சென்னை செந்தமிழ் என்ற பாடல் படப்பிடிப்பின் போது டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவுடன் அடித்த கூத்து இணையத்தில் வைரலாகி வருகின்றது. 
 
 
அப்போது, அறிமுக நடிகையாக இருந்த அசின் நடனமாட மிகவும் கஷ்டப்ட்டுள்ளார். ஆனாலும், பிருந்தா மாஸ்டர் அவரை அழகாகவும், பொறுமையாகவும் கையாண்டு அந்த பாடலை முடித்துக்கொடுத்துள்ளார். 
 

பாடலின் ஷூட்டிங் முடிந்த பிறகு டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவை உப்பு மூட்டை தூக்குவது போல தூக்கி கூத்து கட்டியுள்ளார் அசின். அந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Blogger இயக்குவது.