இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் திரிஷா..! - ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். ஒரு சில நடிகைகள் ஹீரோயின்கள் கதாபாத்திரத்திற்கு மட்டுமே சரியாக இருப்பார்கள். அதேபோல் சில நடிகைகள் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது சரியாக இருப்பார்கள். 
 
ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும்தான் கதாநாயகி கதாபாத்திரத்திற்கும் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கும் நடிப்பதற்கு சரியான முக அமைப்புடன் காணப்படுவார்கள். அப்படி அனைத்து கதாபாத்திரத்திற்கும் பொருந்தக்கூடிய நடிகைகளாக ஒரு சில நடிகைகள் இருந்துள்ளனர். 
 
ஆரம்ப காலத்தில் சிம்ரன் தனது படங்கள் அனைத்திலுமே கவர்ச்சியாக நடித்திருப்பார். இது இவருக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலம் அடைவதற்கு காரணமாக அமைந்தது. அதன் பிறகு நல்ல பெண்ணாக பல படங்களில் நடித்தார். 
 
 
பின்பு குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வெற்றி பெற்றார். திரிஷா முதலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது படங்களில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். பின்பு படத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். 
 
இருப்பினும் திரிஷாவிற்கு எந்தவிதமான கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதில் கச்சிதமாகப் பொருந்த கூடிய நடிகையாக பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் திரிஷா, தற்போது வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். 
 
கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது. இந்த தொடர்கள் திரைப்படங்களைப்போல் காதல், ஆக்‌ஷன், மர்மம், பிரம்மாண்டம் என்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு சினிமாவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. 
 
 
இதனால் நடிகைகள் பார்வை வெப் தொடர்கள் பக்கம் திரும்பி உள்ளது. ஏற்கனவே மீனா, காஜல் அகர்வால், நித்யா மேனன், ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். 
 

2 கோடி ரூபாய் சம்பளம்

 
இந்த நிலையில், நடிகை திரிஷாவும் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவர் நடிக்கும் முதல் வெப் தொடருக்கு ‘பிருந்தா’ என பெயரிடப்பட்டு உள்ளது. தெலுங்கில் தயாராகும் இந்த வெப் தொடரை தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். 
 
 
சூர்யா வங்கலா இயக்கும் இந்த வெப் தொடரில் நடிகை திரிஷா துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் ஹைலைட்டான விஷயமே, 9 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸில் நடிக்க 2 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளாராம் த்ரிஷா. 
 
இந்த வெப்சீரிஸ் முழுதும் திரிஷா மட்டும் தான் முதன்மையான கதாபாத்திரமாம், மேலும், வெளிப்படையாக காட்டக்கூடிய படுக்கையறை காட்சிகள் சில இடம் பெற்றிருப்பதால் அம்மணி 2 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளாராம். 
 

இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி

 
சினிமாவில் சென்சார், குடும்பத்துடன் படத்திற்கு வருபவர்கள்.. என பல விஷயங்களை பொருத்து தான் படத்தில் காட்சிகள் இடம் பெரும். ஆனால், வெப் சீரிஸில் சென்சாரும் இல்லை, எந்த லிமிட்டும் இல்லை.. அதனால் ஒரே அமுக்கு, டுமுக்கு, அமால், டுமால் தான்.
 
 
இயக்குனர் எதிர்பார்ப்பதை அப்படியே எடுத்து கூறலாம். நடிகைகளும் எவ்வளவு கவர்ச்சி காட்டினாலும் விணாகாது. அப்படியே ரசிகர்களின் கண்களுக்கு சென்று விடும் என்பதால் இறங்கி அடிகிறார்கள்.

காஜல் அகர்வால், அமலாபால், அஞ்சலி, நித்யா மேனன், ரம்யா கிருஷ்ணன், சமந்தா ஆகியோர் வெப் சீரிஸில் ஒரு காட்டு காட்டி விட்டனர். இதனை தொடர்ந்து, திரிஷாவும் தன்னை அதில் இணைத்துகொண்டிருக்கிறார்.
Powered by Blogger.