"பொசுபொசுன்னு கப் கேக் மாதிரி இருக்கீங்க.." - நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படம்..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், பண்ணையாரும் பத்மினியும் படத்தில் பார்க்க ரசிகர்களுக்கு புதிதாய் இருந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கருத்தரித்திரருந்தார்.
அதோடு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அவர், அதுகுறித்து கூறியிருந்தார். அதில், முதல் குழந்தை அதிதிக்கு மூன்று வயதான போது இரண்டாவது குழந்தைக்கு திட்டமிட்டோம்.
இப்போது கற்பமாக உள்ளேன். குடும்பத்தினர், மருத்துவர் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தினர். தடுப்பூசி தொப்புள் கொடியை யோ, குழந்தையையோ சென்றடையாது.
அதை புரிய வைத்தது என் கணவர் தான். எனக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. அவரும் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டார், என தெரிவித்தார்.
இந்நிலையில், பிங்க் நிற புடவையில் பொசுபொசுவென இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கப் கேக் மாதிரி பொசுபொசுன்னு இருக்கீங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.