"ஹாலிவுட் ஹீரோயினுங்க எல்லாம் இவங்க முன்னாடி மண்டி போடணும்.." - படு கிளாமரான உடையில் வித்யா பிரதீப்..!

 
நாயகி சீரியலில், குடும்ப தலைவியாக செம்ம கெத்தாக நடித்து வந்த வித்யா, பிரதீப் தற்போது திரைப்படங்களில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் நிலையில் தலைவி படத்தில் தோன்றிய இவரது சில புகைப்படங்கள் இணையத்தை திக்கு முக்காட வைத்து வருகின்றது.
 
சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஒருபோதும் வெள்ளித்திரையில் மிளிர முடியாது என்பதை ஒரு சிலர் மாற்றி காண்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியுள்ளனர். 
 
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாயகி’ சீரியலில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வித்யா பிரதீப். இவர் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சைவம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கி இருந்தார். 
 
அதன் பின்னர் பசங்க – 2, ‘ஒண்ணுமே புரியல’, ‘அச்சமின்றி’ என பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார்.
 
இவர் மாடல் அழகி என்பதால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது வித்யாசமான கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் ஹாலிவுட் நடிகை ‘மர்லின் மன்றோ’ போன்று உடையணிந்து புகைப்படம் எடுத்துள்ளார். 


இது அவரது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு சும்மா அம்சமா இருக்காங்களே... இவ்ளோ நாள் எங்க இருந்தாங்க.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.