"போதும்.. போதும்.. இதுக்கு மேல தாங்க முடியாது.." - வரிசை கட்டி அடித்த வாணி போஜன்..! - அலறும் ரசிகர்கள்..!
கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கில்லியாக பயன்படுத்தி கொண்டு, தன்னுடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் முனைப்பு கட்டி வருகிறார் வாணி போஜன்.
நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடித்த, 'ஓ மை கடவுளே' படத்தில் இவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தாலும், ஹீரோயினாக நடித்த ரித்திகா சிங்கை விட இவர் கை வசம் தான் அதிக படங்கள் உள்ளது.
அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெட்ரி பெற்றதோடு, ஹீரோயின் ரித்திகா சிங்கை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அழகாலும், எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்ற துவங்கிவிட்டார்.
'ஓ மை கடவுளே' படத்தை தொடர்ந்து, வைபவுக்கு ஜோடியாக வாணி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான, லாக்அப் படத்திற்கு, கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
எனினும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் வாணி போஜன், அந்த வகையில் தற்போது இவரது கைவசம்... 'பாயும் ஒளி நீ எனக்கு', பகைவனுக்கு அருள்வாய், சியான் 60 உள்பட சுமார் 6 படங்கள் இவரது கைவசம் உள்ளது.
மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்ற, விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது.. செம்ம க்யூட்டான போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளார்.
விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து,
தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும்
எளிதில் கிடைத்துவிடாது.
மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன்
மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன். தற்போது வெள்ளித்திரையில்
பிரகாசித்து வருகிறார்.
இந்நிலையில், புடவை சகிதமாக பால்கனியில் நின்று கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கிறங்கடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், "போதும்.. போதும்.. இதுக்கு மேல தாங்க முடியாது.." என்று கதறி வருகிறார்கள்.