முதன் முறையாக நீச்சல் உடையில் ஸ்ரீதிவ்யா..! - ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!
“சங்கிலி புங்கிலி கதவ தொற” படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் காணாமல் போன ஸ்ரீதிவ்யா, மூன்று வருடங்களுக்குப் பின் ரீஎன்ட்ரி ஆகிறார். சிவகார்த்திகேயனின் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா.
ஊதா கலரு ரிப்பன் பாடலும், பாவடை தாவணியில் இவர் காட்டிய ஸ்வீட் அண்ட் க்யூட் ரியாக்ஷன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து ஜீவா, ஈட்டி, மருது, காக்கி சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இளம் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரீதிவ்யா, இதுவரை ஓவர் கவர்ச்சி காட்டி நடித்தது கிடையாது. பிரபல இயக்குநர் அட்லி தயாரிப்பில் 2017ம் ஆண்டு வெளியான “சங்கிலி புங்கிலி கதவ தொற” படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் காணாமல் போன ஸ்ரீதிவ்யா, மூன்று வருடங்களுக்குப் பின் ரீஎன்ட்ரி ஆகிறார்.
இளம் ஹீரோக்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் . அதர்வா நடித்த ’பாணா காத்தாடி’, 'செம போத ஆகாதே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா பிசியோதெரபி மருத்துவராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஸ்ரீதிவ்யா கமிட் ஆகிருக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகின்றது.
சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வருவார் ஸ்ரீதிவ்யா என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அந்த படத்தில் ஸ்ரீதிவ்யா முதன் முறையாக பிகினி உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறுகிறார்கள்.
இதற்காக, கணிசமாக உடல் எடை குறைத்துள்ளாராம் ஸ்ரீ திவ்யா. அது என்ன மாயமோ தெரியல.. சிம்ரன்ல இருந்து கீர்த்தி சுரேஷ் வரைக்கும் எல்லா ஹீரோயின்களும் அக்கட தேசத்தில் தான் கவர்ச்சியை வாரி வழங்குகிறார்கள்.
தமிழ் நாட்டுக்கு மட்டும் ஓர வஞ்சனை பண்றாங்க.. அந்த லிஸ்டுல ஸ்ரீதிவ்யாவும் இணைந்துள்ளார் என்று ஏங்கி போயுள்ளனர் ரசிகர்கள்.