"சினிமாவுல கூட இம்புட்டு கவர்ச்சி காட்டலையே.." - படுகிளாமரான ட்ரெஸ்ஸில் இணையத்தை திணற வைத்த காஜல் அகர்வால்..!
நடிகை காஜல் அகர்வால் அல்ட்ரா மாடர்ன் உடையில், தற்போது விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய் , அஜித் , சூர்யா , தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.
சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்த காஜல் அகர்வால், தன்னுடைய கணவர் கூறினால் உடனே சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றும், ஆனால் அவரும், தன்னுடைய குடும்பத்தினரும் தான் மீண்டும் திரையுலகில் நடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கூறினார்.
2021 இல் வெளியான வெப் தொடர் லைவ் டெலிகாஸ்டில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். அவரது நடிப்பில் ஹேய் சினாமிகா, கோஷ்டி, பாரிஸ் பாரிஸ் ஆகிய தமிழ்ப் படங்கள் வெளிவர உள்ளன. இந்தியன் 2, கருங்காப்பியம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சிரஞ்சீவி, ராம் சரண் நடித்துள்ள ஆச்சார்யாவிம் காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.காஜல் அகர்வால் நாகார்ஜுனின் கோஸ்ட் படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியான நிலையில், திடீரென அவரை படத்திலிருந்து நீக்கியுள்ளனர்.
எதற்காக அவரை படத்திலிருந்து நீக்கினர் என்பது குறித்து தயாரிப்பு தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதாக வந்த செய்தியே அவரை படத்திலிருந்து நீக்க காரணம் என்கிறது தெலுங்கு திரையுலகம். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கு ஏராளமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தை 5 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருவதாக காஜல் அகர்வால் அறிவித்துள்ளார். இதற்கு காரணமான ரசிகர்களுக்கும் அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக தனது கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சினிமாவுல கூட இம்புட்டு கிளாமர் காட்டுனதில்லையேமா.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.