"இதை பண்ணுங்க போதும்.. ஜிம் எல்லாம் வேண்டாம்..." - ரகசியம் உடைத்த சாய்பல்லவி..!


தமிழ் நடிகையான சாய் பல்லவி தமிழை விட தெலுங்கில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து அங்குள்ள ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். 
 
அவருடைய நடனத் திறமையைப் பார்த்து மயங்காத ரசிகர்களே கிடையாது. மகேஷ் பாபு கூட 'லவ் ஸ்டோரி' படத்தில் அவரது நடனத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் பாராட்டினார். 
 
தற்போதுள்ள நடிகைகள் பலரும் தங்களது உடலழகை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறார்கள். பலரும் அவர்களது சமூக வலைத்தளங்களில் அந்தப் புகைப்படங்களைப் பதிவிட்டதைப் பார்த்திருப்பீர்கள். 
 
ஆனால், சாய் பல்லவி தனக்கு ஜிம் வேண்டாம், டான்ஸ் போதும் என தெரிவித்துள்ளார். நடனத்தை விட சிறந்த உடற்பயிற்சி எதுவுமில்லை என்று கூறியுள்ளார். 
 
தினமும் நடனமாடுவதால் மன அழுத்தமும் குறைகிறது, உடலையும் பிட்டாக வைத்துக் கொள்ள முடிகிறது. 30 நிமிடங்கள் நடனமாடினாலே போதும் 400 கலோரிகளைக் குறைத்துவிடலாம். என நடனத்தின் மீதுள்ள பற்றைப் பற்றிக் கூறியுள்ளார். 
 
சாய் பல்லவி ஒரு டாக்டர். அதனால் அவர் சொல்வதிலும் உண்மை இருக்கத்தானே செய்யும். மேலும், சாய் பல்லவி சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவாராம்.
Blogger இயக்குவது.