நடுக்கடலில் சொகுசுக் கப்பலில் போதை பார்ட்டி...VIP மகனுடன் பொட்டு துணி இளம் நடிகை - தீயாய் பரவும் வீடியோ..!
மும்பை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கப்பலில் அதிரடியாக சோதனை செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், 10 பேரை கைது செய்தனர். இதில் பாலிவுட்டின் பிரபல நடிகரின் மகன் உள்பட சில முக்கிய புள்ளிகள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அனைவரும் மும்பைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கோடிக்கணக்கான ரூபாய்க்கு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு டிக்கட்டுகளை விற்று போதைப் பார்ட்டிக்கு கப்பலில் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பார்ட்டியில் அளவில்லா போதை வஸ்துக்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருகின்றது. சுமார், 7 மணி நேரமாக போதைத் தடுப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொகய்ன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பெரும் அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் பிரபல இளம் நடிகை ஒருவர் VIP ஒருவரின் மகனுடன் தலைக்கேறிய போதையில் ஒட்டு துணி இல்லாமல் ஆட்டம் போட்ட சில காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.
மேலும், பல நடிகைகள் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஏற்கனவே, பாலிவுட் நடிகைகள் மீது எக்கச்சக்கமான குற்றசாட்டுகள் உள்ள நிலையில் இந்த விவாகரம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் நடுக்கடலில் அரங்கேறும் இந்த சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றது.
இதனால் பல அசம்பாவிதங்கள் நடைபெறுவதாகவும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது.