அப்படி போடு.. வேற லெவல்.. இதுக்கு தான 3 வருஷம் காத்திட்டு இருந்தோம்.. ஜோதிகா படத்திற்கு அங்கீகாரம்..!
நடிகை ஜோதிகா கடந்த 2015 ஆம் ஆண்டு '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்க தொடங்கிய பின்னர், அதிகப்படியாக பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் குடும்பத்தினரால் திறமை இல்லாத பெண்ணாக பார்க்கப்படும் ஜோதிகா, அவரது திறமையை வெளிக்காட்டி எப்படி தன்னை ஒரு தைரியமான பெண்ணாக வெளிக்காட்டி கொள்கிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் 'காற்றின் மொழி'. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஜோதிகா ஒரு ஆர்.ஜே -வாக நடித்திருப்பார்.
தமிழ் சினிமாவில், நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா. 90 களில், முன்னணி நடிகையாக இருந்த இவர், திருமணத்திற்கு பின் குழந்தைகளை கவனிப்பதற்காக சில ஆண்டுகள் திரைத்துறையிலிருந்து விலகியே இருந்தார்.
குழந்தைகள் வளர்ந்த பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அந்த வகையில் ஜோதிகா, கடந்த 2015 ஆம் ஆண்டு கணவர் சூர்யாவின் தயாரிப்பில், ' 36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.பாலிவுட்டில் நடிகை வித்யா பாலன் நடிப்பில் வெளியான, 'Tumhari Sulu ' என்கிற படத்தின் ரீமேக்காக இப்படம் வெளியானது.
இந்தப் படத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்பில் அசத்தியிருந்தார் ஜோதிகா. இந்நிலையில் இந்தபடத்திற்கு தான் தற்போது சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.உலகின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சி, துபாயில் துவங்க உள்ளது. இதில் கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியாவும் தனது தொழில் துறை, தகவல் தொழில்நுட்பம், சேவை துறை மற்றும் பிற துறைகளை விளம்பரப்படுத்தும் இந்நிகழ்ச்சியில், கலாச்சாரம் மற்றும் சினிமா உட்பட பெரிய அளவில் பங்கேற்பு செய்ய உள்ளது. இந்த விழாவில்தான் தற்போது நடிகை ஜோதிகா நடித்துள்ள 'காற்றின் மொழி' திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், காற்றின் மொழி திரைப்படம் வெளியான போதே நிச்சயம் இந்த சிறப்பு அங்கீகாரம் கிடைக்கும் என ரசிகர்கள் பலராலும் பேசப்பட்டது. தற்போது, அது நடந்துள்ளது.