உடலுறவில் இது ரொம்ப முக்கியம்..! - கூச்சமே இல்லாமல்.. ஓப்பனாக கூறிய பாலிவுட் நடிகை கரீனா கபூர்..!
பாலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதியினர் கரீனா கபூர் மற்றும் சயிப் அலிகான்.கடந்த 2012-ம் ஆண்டு திருமணமான இந்த தம்பதியினருக்கு முதலில் தைமூர் அலி என்ற ஆண் குழந்தை பிறந்தது.
அதனை தொடர்ந்து கடந்த ஆக்ஸ்ட் மாதம் மீண்டும் தான் கர்ப்பமாக உள்ளதாகவும் , தங்களது இரண்டாவது குழந்தைக்கு காத்திருப்பதாகவும் அறிவித்திருந்தார்கள் .
இந்த நிலையில் நேற்று கரீனா மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தற்போது மீண்டும் ஆண்குழந்தை பிறந்துள்ளதாக சயிப் அலிகான் அறிவித்துள்ளார்.
குழந்தையும் ,சேரும் நலமாக இருப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார்.மீண்டும் ஆண்குழந்தைக்கு பெற்றோரான சயிப் மற்றும் கரீனா கபூருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், கரீனா கபூர் கர்ப்பமாக இருந்தபோது தான் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்தும், சவால்கள் குறித்தும் `பிரக்னன்சி பைபிள்' என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அப்புத்தகம் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளிவந்தது. அதை விற்பனை செய்ய கரீனா கபூர் சமூகவலைதளத்தில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். முக்கியமாக இந்த புத்தகத்தில் கர்ப்ப காலத்தில் உடலுறவு குறித்து தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, கர்ப்பமாகி முதல் மூன்று மாதங்கள் உடலுறவு மீதான ஆர்வம் எனக்கு குறைந்து விட்டது. முக்கியமாக, கர்ப்ப காலத்தில் பெண்கள் எப்படி தங்களை பற்றி உணர்கிறார்கள் என்பதை பலரும் புரிந்துகொள்வதில்லை.
கர்ப்ப காலத்தில் மனைவி வழக்கம் போல அழாகாக இருக்க வேண்டும் என்றோ, படுக்கையில் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்றோ எதிர்பார்க்க கூடாது. இவை இரண்டும் மிகவும் முக்கியம். ஆனால், கர்ப்பமாக இல்லாத போதும்.. சாதரண நாட்களில் கூட படுக்கையில் என்னுடைய துணை இப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கோ என் கணவருக்கோ இல்லை.