"நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?.." - "ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..." - கவர்ச்சி உடையில் நயன்தாரா..!
கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்கிற பெருமைக்கும் உரியவர்.
இத்தனை வருடங்களாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் நயன்தாரா அட்லி, படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகளிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
சிம்பு, பிரபுதேவா உடனான காதல் முறிவுகளுக்கு பின் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை கதாலித்து வருகிறார் நயன்தாரா. நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார்.
இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான 'கூழாங்கல்' படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படம் ஏற்கனவே நெதர்லாந்து நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று, ‘டைகர்’ விருதை தட்டிச் சென்றது.
இந்நிலையில், தோல் நிறத்தில் ஆன கவர்ச்சி உடையில் கிளாமர் ததும்ப நிற்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வட்டமிட்டு வருகின்றன.
இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா.. ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. என்று கலாய்த்து வருகின்றனர்.