நீச்சல் குளத்தில்.. சொட்ட சொட்ட நனைந்த படி.. குளுகுளு குல்ஃபி போல நிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!
கோலிவுட்டின் பிஸியான ஹீரோயின் என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். தற்போது 6 மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், த்ரில்லர், ஹாரர் படமான பூமிகாவில் மிக முக்கியமான கேரக்டரில் தான் நடிப்பதாக தெரிவித்திருந்தார்.
இயற்கை எவ்வாறு மனித குலத்திற்கு எதிராக திரும்புகிறது என்பதை சொல்லும் படம். ரத்திந்திரன் ஆர் பிரசாத் இயக்கும் இந்த படத்தை பேசன் ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படம் நெட்ஃபிளிக்சில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.
ஆனால் ஓடிடி தளங்களை விட சினிமா தியேட்டரிலேயே தனது படங்களை பார்க்க விரும்புவதாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறி இருந்தார். இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து க/பெ ரணசிங்கம் படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் ஓடிடி.,யில் தான் ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்பு மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றது. அதன் பிறகு ஐஸ்வர்யா நடித்த படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை.பூமிகா படத்துடன் துக் ஜெகதீஷ், நானி, டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு, துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை ஆகிய படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார்.
இந்த இளம் வயதிலேயே அம்மாவாகவும், ஹீரோவின் தங்கையாகவும் நடித்தது ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்பது வியப்பான விஷயம் தான். தற்போது லீட் ரோலில் நடிக்கும் அளவிற்கு ஒரு டாப் ஹீரோயினாக மாறியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், இடையில் சட்டப்படி குற்றம் என்ற படத்தில் கவர்ச்சியாக நீச்சல் உடை அணிந்து நடித்திருந்தார்.
அதன் பிறகு எந்த படத்திலும் நீச்சல் நடித்து இல்லை. இந்நிலையில், நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் சொட்ட சொட்ட நனைந்த படி போஸ் கொடுத்து அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.