"பெசஞ்சு வச்ச பால்கோவா.. கிளாமர் மகாராணி..." - மொட்டை மாடியில்.. கவர்ச்சி உடையில் மிரட்டும் கீர்த்தி சுரேஷ்..!
தமிழ் சினிமாவின் ஹோம்லி நடிகை, லட்சணமான நடிகை என பெயரெடுத்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பாட்டி, அம்மா என திரைப்பின்னணி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கீர்த்தி சுரேஷுக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்கும் படவாய்ப்புகள் மிகவும் சுலபமாக கிடைத்தது.
ஆனால், அதையெல்லாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டலுக்கு ஆளாகியுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அடையாளம் காணப்பட்டார்.
அதையடுத்து ரஜினிமுருகன் , தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் மகாநடி திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்று தென்னிந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்தார்.
என்னதான் டாப் நடிகையாக உயர்ந்தாலும் கவர்ச்சி விஷயத்தில் எப்போதும் கட்டுப்பாடோடு இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது லட்சணமாக கவுன் அணிந்து கொண்டு மொட்டை மாடியில் தனது முதுகில் அழகை காட்டி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.