"நேச்சுரல் ப்யூட்டி... கிளாமர் குயின்.." - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் இளம் ஹீரோயினாக அறிமுகமாகி அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் கடந்த 10 வருடங்களாகவே ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார். 
 
பல முறை தன்னுடைய காதலனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரொமான்டிக் மழை பொழிந்துள்ளார். ஒரு செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கையை தொலைக்காட்சியில் துவங்கி, சீரியல் நடிகை, தொகுப்பாளினி என தன்னை தானே மெருகேற்றி கொண்டு திரைப்பட நடிகையாகவும் மாறினார். 
 
இவர் நடிப்பில் முதல் முதலாக வெளியான 'மேயாதமான்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, கடைக்குட்டி சிங்கம் படம் முதல் சமீபத்தில் வெளியான 'ஓ மணப்பெண்ணே' படம் வரை தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருவதால், கோலிவுட் திரையுலகின் ராசியான நடிகை என்கிற பெயரையும் பெற்றார். 
 
 
தற்போது இவரது கை வசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ள நிலையில் இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. கவர்ச்சியை வாரி இறைத்தால் தான் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்ட முடியும் என்கிற எண்ணத்தை, சமீப காலமாக சில நடிகைகள் முறியடித்து வருகிறார்கள். 
 
 
தங்களுக்கு தகுந்தது போன்ற கதையை தேர்வு செய்து நடிப்பது இவர்களின் கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.இந்நிலையில், கடற்கரையில் சுடிதார் சகிதமாக க்யூட்டான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 
இதனை பார்த்த ரசிகர்கள், நேச்சுரல் ப்யூட்டி... கிளாமர் குயின்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.