இது நான் நடித்த ப்ளூ பிலிம்-ன்னு அன்னைக்கு சொன்னீங்களே..! - போட்டு தாக்கிய நடிகை ரோஜா..!


சட்டசபையில் சிடி ஒன்றை காட்டி இது நான் நடித்த ப்ளூ பிலிம் சிடி என்று கூறினீர்களே? நினைவிருக்கிறதா என்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை போட்டு தாக்கி இருக்கிறார் எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா. 2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான தருணம். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிடம் படுமோசமான தோல்வியை சந்தித்தது தெலுங்கு தேசம் ஆட்சியை இழந்தது. 
 
முதலமைச்சர் பதவியில் இருந்து சந்திரபாபு நாயுடுவை மக்கள் அகற்றிய காலம். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக முதலமைச்சராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் கிராப்(graph) ஏறுமுகமாகவே இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரசை மக்கள் அங்கீகரித்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தை கைவிட்டனர். 
 
சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதி குப்பத்தில் தெலுங்குதேசம் மண்ணை கவ்வியது. இந்நிலையில், கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசிய போது, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை பற்றி அவதூறாக பேசி வருகின்றனர். என்னளவு இருந்தால் மட்டும் பரவாயில்லை, என் மனைவியை பற்றியும் தாறுமாறாக பேசுகின்றனர் என்று கண்ணீர் விட்டு அழுதார். 
 
அவரது இந்த வீடியோ ஒரு பக்கம் வைரலாக, அதை மிஞ்சும் வகையில் பிரபல நடிகையும், ஒய்எஸ்ஆர் கட்சி எம்எல்ஏவுமான ரோஜா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது, சட்டசபையில் பலமுறை என்னை பற்றி தப்பாக பேசினீர்களே..? நான் ஆபாச படத்தில் நடித்தவள் என்று கூறி சிடி ஒன்றை சட்டசபை கூட்டத்தொடரில் எடுத்து வந்தீர்களே? அப்போது அநாகரிகமாக தெரியவில்லையா…? 
 
உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா..? உங்கள் வீட்டில் மட்டும் தான் பெண்கள் உள்ளனரா..? எங்களின் வீட்டில் யாரும் பெண்களே கிடையாதா…? உங்கள் பேச்சு எனக்கு இப்போது ரொம்ப சந்தோஷத்தை தருகிறது. இனிமேல் உங்களால் அரசியலில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நுழையவே முடியாது என்று போட்டு தாக்கி உள்ளார்.
Powered by Blogger.