உடல் முழுக்க ஐஸ் கட்டிகள்.. குளுகுளுவென படுத்துக்கொண்டு.. போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால்..!
தெலுங்கு, தமிழில் பல படங்களில் நடித்தாலும் அவைகள் சரியாக ஓடவில்லை. 2009 ல் தெலுங்கில் இவர் நடித்த மஹதீரா படம் வசூலை அள்ளிக்குவித்தது. இது காஜல் அகர்வாலுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தந்தது.
மும்பையில் பிறந்த காஜல் அகர்வால், 2004 ம் ஆண்டு கியூன் ஹோ கயா நா என்ற இந்தி படத்தின் மூலம் நடிக்க வந்தார். லக்ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார்.
தமிழில் 2008 ம் ஆண்டு பரத்திற்கு ஜோடியாக பழனி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு போன்ற படங்களில் நடித்தார்.
இந்தியில் சில படங்களிலும், தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக படங்களிலும் இவர் நடித்து புகழடைந்தார். தெலுங்கில் காஜல் அகர்வால் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.
தமிழில் மாற்றான், நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல் ஆகிய படங்களில் விஜய், சூர்யா, கார்த்தி, அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கெளதம் கிட்சிலு என்ற தொழிலதிபரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புக்கள் ஏதும் இன்றி இருந்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவான காஜல் அகர்வால் ஐஸ்கட்டிகள் படுத்துக்கொண்டு குளுகுளுவென படுத்திருக்கும் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.