விமான நிலையத்தில் விஜய்சேதுபதியை கடுமையாக தாக்கிய மர்ம நபர்..! - தீயாய் பரவும் வீடியோ..!


தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக படுபிசியாக உள்ளவர் விஜய் சேதுபதி. தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 
 
அதிக படங்களில் நடித்து வரும் இவர், பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாவலர்களுடன் நடந்து வரும் போது பின்னால் ஒருவர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 
 
இந்த வீடியோவில் விஜய் சேதுபதியை தாக்கும் நபரை பாதுகாவலர்கள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில்தான் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக பெற்றார். 
 

இந்த தாக்குதல் எதற்காக நடைபெற்றது என்பது குறித்த முழுவிபரம் போலீசார் விசாரணைக்கு பின்பு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Powered by Blogger.