அடக்கடவுளே.. மறுபடியுமா..? - நயன்தாராவின் ராசி போல... - புலம்பும் ரசிகர்கள்..!


தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டு இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலிக்கிறார்கள். 
 
இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களையும், கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபடும் புகைப்படங்களையும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து காதலை வெளிப்படுத்தி வருகிறார்கள். 
 
சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பங்கேற்றபோது தனது விரலில் அணிந்துள்ள மோதிரத்தை காட்டி அது திருமண நிச்சயதார்த்த மோதிரம் என்றும், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து திருமணம் எப்போது? என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். 
 
இந்த நிலையில் நயன்தாராவின் திருமணம் அடுத்த வருடம் நடைபெற இருப்பதாகவும், திருமண தேதியை திருப்பதி கோவிலில் உள்ள புரோகிதர்களை வைத்து முடிவு செய்து விட்டதாகவும் வலைத்தளத்தில் புதிய தகவல் பரவி வருகிறது. திருமணத்துக்கு முன்பு கைவசம் உள்ள படங்களை முடித்து விட நயன்தாரா திட்டமிட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தற்போது அட்லி, ஷாருக்கான் காம்போவில் உருவாகி வரும் ஹிந்தி படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கவிருந்தா நயன்தாரா. கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தொடங்கியது. 
 

நடிகை நயன்தாராவும் பிரியாமணியும் பங்கேற்றப் புகைப்படங்களும் வெளியாகின. இந்த நிலையில், திடீரென இப்படத்திலிருந்து நயன்தாரா விலகியுள்ளதாகவும், அவருக்குப் பதில் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே அமீர் கானுடன் பாலிவுட் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கவிருந்த நயன்தாரா, அந்த படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில், தற்போது ஷாருக்கான் படத்திலிருந்தும் விலகியுள்ளார். பாலிவுட்டுக்கும் நயன்தாராவுக்கு ராசியே இல்லை போல என்று புலம்பி வருகிறார்கள் நயன்தாரா ரசிகர்கள்.
Powered by Blogger.