திடீரென மேலாடையை விலக்கி.. ப்ரா-வை காட்டிய பனிமலர்..! - என்ன காரணம்..! - வைரல் போட்டோஸ்..!

 
பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்து மன உளைச்சலுக்கு ஆளாக்குபவர்களின் பலமே அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல், அவர்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தாமல் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைதியாக செல்வதை ஊக்கமாக எடுத்துக்கொள்கிறார்கள். 
 
கடை திறப்பு விழாவுக்கு வாங்க என்று அணுகி படுக்கைக்கு அழைத்த நபரை பொதுவெளியில் அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் பனிமலர் வாட்ஸ் அப் ஆதாரத்தை வெளியிட்டு அத்தகைய நபர்களுக்கு பதிலடி கொடுத்து தோலை உரித்து தொங்கவிட்டுள்ளார்.
 
செய்திவாசிப்பாளர் பனிமலர் அவர்கள் உன் அம்மாவிடம் இருக்கிறது தான் எனக்கும் இருக்கிறது என்று ஆவேசமாக கொந்தளித்து பேசிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. செய்திவாசிப்பாளர் பனிமலர் கோவையில் சேர்ந்தவர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் உள்ளார். 
 
இவர் சன் தொலைக்காட்சியில் தான் தன்னுடைய பணியைத் தொடங்கினார். அதன் பின்னர் பாலிமர், புதிய தலைமுறை, நியூஸ் செவன் என பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியுள்ளார். பனிமலர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
 
அந்த வீடியோவில் தன்னிடம் தரக்குறைவாக சமூகவலைத்தளங்களில் வீடியோவில் பேசுபவர்களுக்கு அவர் பதிலடியாக கூறியதாவது: ‘சமூக வலைத்தளங்களில் நேரடியாக வீடியோவில் பேச வரும் சிலர் ஆபாசமாக உன்னை பார்க்கவேண்டும் என்று கூறும் ஆண்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். 
 
உன் அம்மாவிடமும் அப்பாவிடமும் உன் வீட்டுப் பெண்களிடமும் இருப்பதுதான் என்று அனைத்து பெண்களிடமும் உள்ளது. நீ மற்ற பெண்களை அவமதிப்பதாக பேசுவதுபோல் உன்னுடைய வீட்டு பெண்களிடம் பேசுவார்கள் என்பதை மறந்துவிடாதே என்று பேசி வந்தார். 
 

அப்போது, இணையவாசி ஒருவர், உங்களுடைய ப்ரா ஸ்ட்ராப் தெரியுது.. என்று கமெண்ட் செய்யவே கடுப்பான பனிமலர் இங்க என்ன பேசிட்டு இருக்கேன்.. நீ என்ன பாத்துட்டு இருக்க.. ஆமா, நான் ப்ரா போட்டிருக்கேன்.. எல்லா பெண்களும் ப்ரா போடுவாங்க.. உன்னோட அம்மா, அக்கா போடுறதை தான் நானும் போட்டுக்கிட்டு இருக்கேன் என்று தன்னுடைய மேலாடையை விலக்கி உள்ளாடையை காட்டி கோபமாக கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.