நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..? - இப்போது எப்படி இருக்கிறார் என்று பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..!
தமிழ் சினிமாவின் பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வலம் வந்த நடிகை ரஞ்சிதா, ராணுவ அதிகாரி ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் குழந்தைகளை பெற்றுக் கொண்ட அவர், பிரபல சாமியாரான நித்தியானந்தாவின் சீடரானார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா இருவரும் தனிமையில் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அன்று முதல் நடிகை ரஞ்சிதாவின் பெயர் ஏகத்துக்கும் அடி வாங்கியது. நடிகைகள் சாமியார் வசம் தஞ்சமடைவது ஒன்றும் புதிதான விஷயமில்லை. முன்னணி நடிகர்களின் படங்களை விட நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா வீடியோ வெளியான அனைத்து மொழிகளிலும் செம ஹிட் அடித்து 100 நாட்களை தாண்டி ஓடியது.
இதனால் மொத்த வாழ்வாதாரத்தையும் மரியாதையையும் இழந்த ரஞ்சிதா கடைசியில் நித்தியானந்தா வசம் தஞ்சமடைந்தார். அதனைத் தொடர்ந்து நித்தியானந்தாவின் மடங்களில் உயர்பதவியில் இருந்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நித்தியானந்தா மடங்களில் இளம் பெண்கள் பலரும் அந்த மாதிரி தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் எனவும், அதற்கு ரஞ்சிதா மற்றும் நித்தியானந்தா இருவரும் உடந்தை எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.
அதன்பிறகு நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டிற்குச் சென்றது எல்லாம் வேற கதை. இருந்தாலும் இந்தியாவில் உள்ள நித்யானந்தாவின் மடங்களை ரஞ்சிதா கவனித்து வருகிறார்.
மேலும் ரஞ்சிதா மீது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக புதிய வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ள தற்போது ரஞ்சிதாவுக்கு உயர் பதவி கொடுத்து புதிய பெயரையும் கொடுத்துள்ளாராம் நித்தியானந்தா.
அந்த வகையில் இனி ரஞ்சிதாவை, ‘மா ஆனந்தமாயி’ என்று தான் அழைக்க வேண்டுமாம்.