டூ பீஸ் நீச்சல் உடையில்.. குளுகுளு போஸ்.. இளசுகளின் சூட்டை கிளப்பிவிட்ட ஸ்ரீதேவி ஜான்வி கபூர்..!
நடிகை ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு தடாக் என்ற திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.அதையடுத்து குன் ஜன் சக்சேனா, ரூஹி ஆகிய படங்களில் நடித்தார்.தற்போது குட் லக் ஜெர்ரி, மில்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை ஜான்வி கபூர் டூ பீஸ் நீச்சல் உடையில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.பாலிவுட்டில் இவர் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளராக விளங்கும் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் தடாக் படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜான்வி.
தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வருகிறார்.தமிழில் நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் தற்போது ஜான்வி லீட் ரோலில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு குட்லக் ஜெர்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.தொடர்ந்து மலையாள ரீமேக்கான ஹெலன் படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்தடுத்து தென்னிந்திய மொழிப் படங்களில் அவர் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். விரைவில் குட்லக் ஜெர்ரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டூ பீஸ் நீச்சல் உடையில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.