புல் தரையில் மல்லாக்க படுத்தபடி செல்ஃபி.. இணையத்தை கலக்கும் சீரியல் நடிகை பிரவீனா..!

 
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி2 சீரியல் ஆனது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 
இந்த சீரியல் ஏற்கனவே விஜய் டிவியில் மதியத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘என் கணவன் என் தோழன்’ என்ற ஹிந்து சீரியலின் கதையை வைத்து தமிழ் நடிகர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 
 
 
எனவே ராஜா ராணி2 சீரியலில் ஆலியா மானசாவிற்கு கண்டிப்பான மாமியாராக நடித்துக் கொண்டிருப்பவர் தான் மலையாள நடிகை பிரவீனா. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக்கு அம்மாவாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்திலும், அதைப்போல் விக்ரமுடன் சாமி 2, ஆர்யாவுடன் டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
 
இவர் பிரபல தமிழ் மற்றும் மலையாள சீரியல்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் இவர் மலையாள திரையில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
இவர் தற்போது விஜய் டிவியில் மட்டுமல்லாமல் சன் டிவி சீரியல்களிலும் அம்மாவாகவும் மாமியாராகவும் நடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார். 
 
 
இந்த சூழலில் நடிகர் பிரவீனா புல் தரையில் மல்லாக்க படுத்தபடி எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Powered by Blogger.