"சொட்ட சொட்ட நனைந்த உடையில்.." - கிளுகிளு போஸ் கொடுத்துள்ள புன்னைகையரசி சினேகா..!
கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் அம்மாவாக நடித்து அனைவரையும் கலங்க வைத்திருந்த இவர் இப்பொழுது துல்கர் சல்மானின் நடிப்பில் உருவாகி வரும் வான் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் சினேகா இப்பொழுது வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் மிரள வைத்துள்ளார்.
நடிகை சினேகாவை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது அந்த அளவிற்கு பார்க்கும்போதே பக்கத்து வீட்டு பெண் போல தோன்றும் முக லட்சணம், அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்பு புன்னகையாலே அனைவரையும் வசியம் செய்யும் கொள்ளை அழகு என தமிழ் சினிமாவின் புன்னகை அரசியாக வலம் வந்த நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
மாதவன் உடன் இணைந்து நடித்த என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சினேகாவுக்கு அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாக தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
துளியும் கவர்ச்சி காட்டாமல் நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டிருந்த நடிகை சினேகா தமிழைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் பட்டையைக் கிளப்பினார்.
புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, வசூல்ராஜா எம்பிபிஎஸ்,ஆட்டோகிராஃப் என எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சினேகா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்தார்.
சினிமாவில் அறிமுகமான புதிதில் குடும்ப குத்துவிளக்காக தோன்றிய சினேகா காலப்போக்கில் கிறுகிறுக்க வைக்கும் கிளாமர் காட்டி.. கவர்ச்சி குயினாக வலம் வந்தார்.
அதிலும், தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் கவர்ச்சி அணையை திறந்து விட்டு ஆறாக ஓட விட்டார். அந்த வகையில், நீல நிற புடவையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது ஹாட் போட்டோஸ் இங்கே.