சின்னத்திரை அழகி.. சுஜிதா-வா இது..? - ஷாக் ஆன ரசிகர்கள்..! - வைரலாகும் புகைப்படங்கள்..!
பாண்டியன் ஸ்டோர்ஸில் குடும்பத்தின் மூத்த மருமகளாக தனம் என்ற கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா, போட்டோ ஷூட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பாண்டியன் ஸ்டோர்ஸில் சேலையைத் தவிர வேறு காஸ்ட்டியூமில் நடிக்காத இவர், இன்ஸ்டாகிராம்களில் மார்ட்ன் டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களாக அப்லோடு செய்து வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த சுஜிதா இன்றுவரை, சின்னத்திரை மற்றும் வெள்ளிதிரை என இரண்டிலும் நடித்து வருகிறார். கவர்ச்சி காட்டுவதிலும், நெகடிவ் ரோல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டாத அவர், சின்னத்திரையில் மட்டும் சுமார் 14 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரபாக்கி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸில் சுஜிதாவின் ‘தனம்’ கேரக்டர் மிகப்பெரிய ஹிட்டான கதாப்பாத்திரமாக மாறியுள்ளது. பிரைம் டைமில் ஒளிபரப்பாகி ஒரும் இந்த சீரியலில் குடும்பத்தின் மூத்த மருமகளாக பிரமாதமாக நடித்து வருகிறார்.
பல குடும்ப பெண்களுக்கு ரோல் மாடலாகவும் தனம் கேரக்டர் அமைந்துள்ளது. பாக்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்த முந்தானை முடிச்சு படத்தில் இருக்கும் குழந்தை நட்சத்திரம் இவர் தான். சத்யாரஜ் மகளாக, கார்த்திக் மகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக மட்டும் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘என் கணவருக்காக’ தொடரை 90ஸ் கிட்ஸ் மறந்து இருக்கமாட்டீர்கள். அதில் சந்தியாவாக நடித்திருப்பார். பெரும் வரவேற்பை பெற்ற அந்த தொடருக்கு பின் சுஜிதாவுக்கு மிகப் பெரிய ஹிட் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான்.
நடிப்புக்குப் பிறகு போட்டோ ஷூட்டில் அதிக கவனம் செலுத்தும் சுஜிதா, தனது குழந்தைகளுடனும் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்துவார். அப்படி, அண்மையில் வயதான கிழவி பல மேக்கப் போட்டுக்கொண்டு எடுத்த போட்டோக்களைத் தான் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்