"குடிக்கவே தண்ணி இல்ல.. ஆனா,.. நீங்க.. இந்த மாதிரி குளிச்சுட்டு இருக்கீங்க.." - பிக்பாஸ் அனிதாவை விளாசும் ரசிகர்கள்..!

 
சன் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்த அனிதா, கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். பிக் பாஸ் இல்லத்தில் 84 நாட்கள் வரை இருந்த அனிதா பின்னர் எவிக்ஷன் செய்யப்பட்டு வெளியேறினார். 
 
பிக் பாஸ் சீசன் 4ல் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர்.
 
பிக் பாஸ் இல்லத்தில் பல விமர்சனங்களில் அவ்வப்போது சிக்கிக்கொள்ளும் அனிதா சம்பத், பல தடைகளை உடைத்து தனக்கென தனி ரசிகர்களையும் கொண்டிருக்கிறார். 
 
தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஆரம்பித்தவர், அதில் ஏராளமான பயனுள்ள காணொளிகளை அப்லோட் செய்து வருகிறார். 6 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ்களை அனிதா வைத்து இருக்கிறார்.
 
 
இந்நிலையில், தனியார் ஸ்பா ஒன்றின் பிரமோஷனுக்காக சென்றிருந்த அனிதா அங்கே இருக்கும் பாத்டப் ஒன்றில் பழங்கள் மற்றும் ரோஜா இதழ்களை கொட்டி குளியல் போடும் காட்சிகள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். 

 
இதனை பார்த்த ரசிகர்கள், இங்க குடிக்கவே தண்ணி இல்ல.. நீங்க என்னடானா.. பழங்கள்.. ரோஜா பூவெல்லாம் போட்டு குளிச்சுட்டு இருக்கீங்க.. என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.