நீச்சல் உடையில்.. இளம் நடிகருடன் கும்மாளம்.. ஐஸ்வர்யா ராஜேஷா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..!
சினிமா துறை பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் முதன் முதலில் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது பணியை ஆரம்பித்தார். அதன் பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
அதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. 2010 ஆண்டு நீதானா அவன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். 2012ல் வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் அவர் பிரபலமானது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த காக்காமுட்டை திரைப்படம். அப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார்.
அதன் பின்னர் அவருக்கு மளமளவென படவாய்ப்புகள் குவிய துவங்கியது. செக்கச்சிவந்த வானம்,தர்மதுரை, கனா, வடசென்னை , நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக பெயரெடுத்துள்ளார். படங்களில் எப்போதும் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து கன்னியமான நடிகையாக பெயரெடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் நிஜத்திலும் அப்படித்தான் இருந்து வந்தார்.
இந்நிலையில், சட்டப்படி குற்றம் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த அம்மணி அந்த படத்தில் நீச்சல் உடையிலும் நடித்துள்ளார். அந்த படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஒன்று என இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள், ஐஸ்வர்யா ராஜேஷா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.