"உங்களுக்கு வயசே ஆகல.. செம்ம ஹாட்.." - கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் புன்னகையரசி சினேகா...!

 
நடிகர் பிரசன்னா, புன்னகை அரசி சினேகாவை கடந்த 2012ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர காதல் தம்பதிக்கு தற்போது 5 வயதில் விஹான் என்ற மகன் உள்ளார். 
 
திருமணத்திற்கு பிறகும் அவ்வப்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சினேகா தலை காட்ட துவங்கியதும், இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார். கடைசியாக இவர் 'பட்டாசு' திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 
 
பின்னர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் போது அடிமுறை என்ற தற்காப்பு கலையை பயின்று நடித்தார். இதற்காக அவருக்கு பாராட்டுகளும் குவிந்தது. இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சினேகாவிற்கு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். 
 
அந்த குழந்தைக்கு ஆத்யந்தா என பெயர் வைத்துள்ளனர். சமீபத்தில் தான் சினேகா - பிரசன்னா தம்பதியின் செல்ல மகள் முதல் பிறந்தநாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. 
 
 
குழந்தைக்கு ஒரு வயதே ஆவதால், தற்போது திரைப்படங்களை நடிக்காமல் இருக்கும் சினேகா, பல்வேறு விளம்பரங்களில் கணவருடனும், தனியாகவும் நடித்து வருகிறார். 
 
 
இரண்டாவது குழந்தை பெற்ற பின்னர் உடல் எடை கூடி காணப்பட்ட சினேகா தற்போது... மளமளவென குறைத்து யங் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார்.தற்போது விளம்பர படங்கள் மற்றும் சினிமாவில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். 
 
இப்போதும் ஓரிரு பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்துக் கொண்டுதான் வருகின்றன. இந்நிலையில், கவர்ச்சி உடையில் தோழிகளுடன் இருக்கும் தனது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சினேகா.


இதனை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு வயசே ஆகல.. செம்ம ஹாட். என்று வர்ணித்து வருகிறார்கள்.
Powered by Blogger.