காதலனை கட்டிப்பிடித்து.. கொண்டாட்டம்..! - கலைகட்டிய நயன்தாராவின் பிறந்தநாள்..! - வைரல் வீடியோ..!


நடிகை நயன்தாரா இன்று தன்னுடைய 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது பிறந்தநாளை மிக பிரமாண்ட கேக் வெட்டி, வான வேடிக்கையுடன் காதல் பொங்க பொங்க கொண்டாடியுள்ளார் விக்னேஷ் சிவன். 
 
இது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா , அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களை தன் கை வசம் வைத்திருந்தாலும், அவ்வப்போது தன்னுடைய காதலருடன் நேரம் செலவிடவும், குடும்பத்தினரை பார்ப்பதற்கும் தவறியது இல்லை. 
 
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய காதலி நயன்தாரா பிறந்தநாளை செம்ம மாஸாக கொண்டாடி வரும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இந்த வருடமும் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.
 
 
லேடி சூப்பர் ஸ்டார் என்று எழுதப்பட்ட பிரமாண்ட கேக்... மற்றும் நயன் என்ற எழுத்துக்களில் ஆன தனி தனி கேக் என, மிகவும் கலர் ஃபுல்லாக இந்த வருடம் நயன்தாராவின் பிறந்தநாளை செலிபிரேட் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். 


 
மேலும் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் வான வேடிக்கை நிகழ்வுகளும் நடந்துள்ளது. சரியாக தன்னுடைய காதல் தேவதை நயன்தாராவிற்கு இரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ள விக்னேஷ் சிவனின், வீடியோக்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Powered by Blogger.